Ms Word Alignment Tamil (Left,Right,Center,Justify)

Paragraph Or Line Alignment in ms word

இந்த போஸ்டரில் MS Word Line அல்லது paragraph-ஐ எவ்வாறு Align செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். MS Word-இல் பல வகையான Alignment உள்ளன. உதாரணமாக Text Alignment, Table Alignment, Picture Alignment, Shape Alignment, Paragraph Alignment, Margin Alignment என பல உள்ளன

அதில் இப்பொழுது நாம் பார்க்க இருப்பது Paragraph or Line alignment, இது நான்கு வகைப்படும் அவை Left, Right, Center, Justify. இவற்றை எப்படி உபயோகிப்பது என்பதை பார்க்கலாம்.

  1. Left Alignment
  2. Right Alignment
  3. Centre Alignment
  4. Justify Alignment

  எப்பொழுதும் நாம் MS Word document open செய்தவுடன் Default-ஆக நாம் எழுதுவது அனைத்தும் Left alignment ஆகும்.

1.  Left Alignment (லெஃப்ட் அலைன்மெண்ட்)

 Left alignment என்பது left side-ல் start ஆகும். left side வரும் line அனைத்தும் ஒரே மாதிரியாக வரிசையாக இருக்கும், right side அவ்வாறு சமமாக இருக்காது. கீழே படத்தில் காண்பித்து உள்ளவாறு left alignment இருக்கும்.

 நமக்கு  தேவையான Paragraph or Line-Select செய்து கொண்டு alignment-இல்  left-ஐ கொடுக்கவும்


2.  Right Alignment (ரைட் அலைன்மெண்ட்)

Left alignment-க்கு எதிர்மறையாக இருக்கும். Right Side வருவது சமமாகவும் நேராகவும் இருக்கும் ஆனால் left side-ல் அவ்வாறு இருக்காது படத்தில் உள்ளது போல் இருக்கும்

நமக்கு  தேவையான  Paragraph Or Line  Select செய்து கொண்டு alignment-இல் Right-ஐ கொடுக்கவும்.


3.  Centre Alignment (சென்டர் அலைன்மெண்ட்)

  பெரும்பாலும் தலைப்புகள் Centre Alignment-ல் கொடுக்கப்படும், சென்டர் அலைன்மெண்ட் என்பது Left மற்றும் right-க்கு இடையில் இருக்கும் அதாவது ஒரு  page-ல் மத்தியில் இருக்கும்.

 

 கீழே படத்தில் உள்ளது போல் இருக்கும்இதில் வலது இடது இருபுறங்களிலும்  சமமாக இருக்காது. நடுவில் சமமாக இருக்கும்

 நமக்கு  தேவையான Paragraph Or Line-Select செய்து கொண்டு alignment-இல் Center-ஐ கொடுக்கவும்.


4.  Justify Alignment (ஜஸ்டிஃபி அலைன்மெண்ட்)

  சரி இப்போது Left alignment வைத்தால் Right Side சரி இல்லை, Right alignment வைத்தால் Left Side சரி இல்லை, Centre Alignment வைத்தால் இருபுறமும் சரி இல்லை எனவே இருபுறமும் சமமாக இருக்க justify alignment உபயோகப்படுகிறது. இது இருபுறங்களிலும் சமமாக வைக்கின்றது கீழே படத்தில் காண்பித்துள்ளது போல்.

 

 Web page-இல் இணைய பக்கங்களில் இந்த Justify அலைன்மெண்ட் உபயோகப்படுகிறது

 

Conclusion

 இந்த போஸ்ட் இல் நாம் MS Word alignment  எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை பார்த்தோம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Leave a Reply