How to Create a New Blank Document in MS word Tamil

Create,Open,Save and Close Ms Word Document in Tamil

இப்பொழுது நாம் பார்க்க இருப்பது மிகவும் அடிப்படையான ஒன்றாகும் இது இல்லாமல் எந்த கம்ப்யூட்டரும் இல்லை என்ற அளவிற்கு இது முக்கியமானது

இதனை Basic என்றும் குறிப்பிடுவர் எனவே இதனை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதில் பலவிதமான பயன்கள் உள்ளன அதில் சில: புத்தகங்கள் எழுதவும், டாக்குமெண்ட் ரெடி செய்யவும், பிரசன்டேஷன் மேலும் Letters எழுதவும், Resume போன்ற அடிப்படையான தேவைகளுக்கும் இது முக்கியமானது ஆகும் எனவே இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

  1. Create a New Blank Document
  2. How to open a document
  3. How to Save a Document
  4. How to close a Document


உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் வெர்ஷன் உபயோகிக்கிறீர்கள் என்றாலே Ms Word-ம் அதில் இருக்கும்.

Tips: உங்கள் கம்ப்யூட்டரில் எம்எஸ் வேர்டு இல்லையெனில் முதலில் அதனை இன்ஸ்டால் செய்யவும். Ms word 2016 இன்ஸ்டால் செய்வது

கீழே படத்தில் காண்பித்து உள்ளவாறு Start பட்டனில் பக்கத்தில் உள்ள Search பாக்ஸில் Ms Word என டைப் செய்து என்டர் கொடுத்தால் ஓபன் ஆகும். Or Search பாக்ஸில் Ms Word என டைப் செய்தால் மேலே Ms Word காண்பிக்கும் அதனை கிளிக் செய்தால் ஓபன் ஆகும்.

Or

Start >>>> Microsoft Office >>>> Microsoft Word

புதிதாக ஒரு பைலை எப்படி ஓபன் செய்வது?

Ms Word ஓபன் செய்யவும், செய்தவுடன் கீழே படத்தில் காண்பித்து உள்ளவாறு இருக்கும் அதில் Blank Document- ஐ கிளிக் செய்யவும். இப்பொழுது புதிதாக ஒரு டாக்குமென்ட் ஓபன் ஆகி விட்டது. shortcut key: Ctrl + N

ஏற்கனவே Document ஓபனில் இருக்கும் பொழுது புதிதாக ஒரு பைலை உருவாக்க வேண்டுமெனில் File >>>> New >>>> Blank Document

பைலை(Document) ஓபன் செய்வது எப்படி?

Ms Word – இல் File >>> Open >>> உங்கள் பைலை எங்கே வைத்திருக்கிறீர்கள் எந்த Path-இல் வைத்திருக்கிறீர்கள் அதனை ஓபன் செய்து இரு முறை கிளிக் செய்யவும் shortcut key: Ctrl + N

how to open ms word document

Recent: இதில் கடைசியாக ஓபன் செய்த பைல்களின் பட்டியல் இருக்கும் இதிலிருந்து சுலபமாக உங்கள் பைலை ஓபன் செய்யலாம்.

OneDrive: இதில் உங்களின் பைலை வைத்திருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் இதனை ஓபன் செய்யலாம். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தான் ஓபன் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை

This Pc: உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அதனை செலக்ட் செய்து ஓபன் செய்யவும், இதனை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் Folder ஓபன் ஆகும்

Document(டாக்குமென்ட்) SAVE செய்வது எவ்வாறு?

Save என்பது நம்முடைய பைலை சேமித்து வைப்பது இவ்வாறு செய்வதால் மீண்டும் நம்முடைய பைலை எத்தனை முறை வேண்டுமானாலும் ஓபன் செய்து பார்க்கலாம். செய்யும்பொழுது அதற்கு ஒரு பெயர் வைத்து எந்த இடத்தில் மற்றும் எந்த பார்மட்டில் சேவ் செய்கிறோம் என்பதை சரியாக குறிப்பிட வேண்டும்.

மீண்டும் பைலை ஓபன் செய்ய இது உதவியாக இருக்கும். Save செய்யும்பொழுது ஆட்டோமேட்டிக்காக அது word பைலாக save ஆகும்.

File >>>> Save >>>>Document Name shortcut key: Ctrl + S

டாக்குமெண்டை(Document) Close செய்வது எவ்வாறு?

நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் பைலை மூட வேண்டும் என்றால் Ctl + W

Ctl மற்றும் W என்ற இரு கீபோர்டு வார்த்தைகளையும் ஒன்றாக பிடித்தால் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் டாக்குமெண்ட் Close ஆகும்

Ms-Word Close செய்ய வேண்டுமென்றால் Ctl + X என்ற இரு கீபோர்டு வார்த்தைகளையும் ஒன்றாக பிடித்தால் Close ஆகும். அல்லது Alt + F4 shortcut key: Ctrl + W

மேலும் கீழே படத்தில் கண்டித்துள்ள முறையிலும் Close செய்யலாம்

Leave a Reply