CSS Colors in Tamil
நமக்கு தேவையான color- ஐ css-ல் 6 விதமான முறைகளில்(Format-ல்) குறிப்பிடலாம்
1.RGB
2.RGBA
3.HSL
4.HSLA
6.Color name
1. RGB
Rgb (red ,green ,blue)
இது 0 – விலிருந்து 255 – வரை காண்பிக்கும் . இதில் Rgb (0,0,0)என்பது கருப்பு நிறம் , 0 – ன் அளவு அதிகரிக்க அதிகரிக்க நிறமாற்றம் அடையும் rgb (255 ,255 ,255)என்பது வெள்ளை நிறம் , Red , Green , Blue இந்த மூன்று நிறங்களும் இணைந்து நமக்கு தேவையான நிறத்தை அளிக்கிறது .
2.RGBA
Rgba(red,green,blue,alpha)
Opacity 0 விலிருந்து 1 வரை உள்ளது 1 என்பது முழு நிறத்தையும் 0 என்பது நிறமற்றதாகவும் கணக்கிடப்படுகிறது .
Eg :
3.HSL
Hsl (hue ,saturation ,lightness)
HSL மூலம் நாம் COLOR-ஐ குறிப்பிடலாம் . இதில் h என்பது hue . இது 0 முதல் 360 degree வரை உள்ளது .
உதாரணமாக:
240 என்பது blue color 0 என்பது red color இதில் நமக்கு தேவையான degree – ஐ தேர்வு செய்து உபயோகிக்கலாம் .
Saturation:
ஒரு நிறத்தின் அடர்த்தியை குறிப்பிடுவது இதில் 0% முதல் 100% வரை பயன்படுத்தலாம் . 50 % என்பது நாம் தேர்ந்தெடுக்கும் நிறத்தின் பாதி color 100% முழு நிறம்
Lingtnoss :
நாம் தேர்வு செய்யும் நிறத்தை மங்கலான நிறமாக மாற்றுவது .
இதன் மூலம் அதிக பிரகாசமான அல்லது மங்கலான நிறத்தை நாம் பயன்படுத்தலாம்.
Eg:
4.Hsla
hsla(hue,saturation,lightness,alpha)
Hsla என்பது hsl – உடன் opacity இணைந்து வரும் color அதாவது transparent எந்த அளவு வேண்டும் என்பதை சேர்த்து கிடைக்கும் color.
5.Hex:(hexadecimal) value
Hex code 6 digit -இல் இருக்கும், இது #(hash) tag உடன் ஆரம்பிக்கப்படும். இது இரண்டு இரண்டு digit -ஆக கணக்கிடப்படுகிறது 0 முதல் 9 வரை உள்ள எண்களாக உபயோகிக்கப்படுகிறது. மேலும் A முதல் F வரை உள்ள Lettrs உபயோகிக்கப்படுகிறது.
இதன் மூலம் நமக்கு விருப்பமான color -ஐ தேர்வு செய்யலாம். இதனால் exact color -ஐ நாம் தேர்வு செய்ய முடியும்.
Eg:
#48d2a7
6.Color name
Eg:
How To Apply CSS Colors on HTML (இதனை பின்வருவனவற்றில் பயன்படுத்தலாம்).
1.Text color
2.Background color
3.Border color
மூன்று முறைகளுக்கு அழகு படுத்த பயன்படுகிறது
1.Text color
Text-ன் color-ஐ மாற்றலாம். நமக்கு தேவையான color-ல் text -ன் நிறத்தை மாற்றலாம். அனைத்து text-ன் நிறம் அல்லது குறிப்பிட்ட text-ன் நிறத்தை மாற்றலாம்.
2.Background color
HTML element-ன் பின்புற நிறத்தை மாற்றலாம்.
உதாரணமாக
Table ,paragraph ,text box ,heading …
3.Border color
HTML element அனைத்திற்கும் border-color apply செய்யலாம்
Paragraph, heading, …
CSS comments
Css-coding எழுதும்போது ஏதேனும் பகுதி தற்சமயம் தேவையில்லை ஆனால் பிறகு தேவை எனில் அதனை comment tag பயன்படுத்தி அந்தப் பகுதி மட்டும் செயல்படுத்துவதை தடுக்கலாம்.
மேலும் நாம் coding-ல்ஏதேனும் Notes குறிப்பிட்டு பகுதியாக புரியும்படி எழுதுவதற்கு பயன்படுத்தலாம்.
eg:/*header பகுதி*/
body பகுதி , footer பகுதி
இதற்கு /*text */ என குறிப்பிடலாம். இவ்வாறு குறிப்பிடுவதால் மீண்டும் coding-ஐ எழுத அல்லது பயன்படுத்த எளிமையாக இருக்கும் comment webpage-ல் display ஆகாது.
/*your
text*/