How To Create a Website in Tamil on google blogger

How to create a website in Tamil

        இந்த போஸ்டரில் புதிதாக எப்படி ஒரு Blog or Website-ஐ உருவாக்குவது என்பதை பார்க்கலாம்.

ஏன் பிளாக் உருவாக்க வேண்டும்:

  இப்பொழுது இருக்கும் இன்டர்நெட் உலகில் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இன்டர்நெட். இது இல்லாதவர்களே இல்லை என்ற அளவிற்கு இது முக்கியமாகி விட்டது எனவே பிளாக் மூலமாக நம் பொருட்களை விற்பனை செய்யலாம், வருமானம் ஈட்டலாம், நம் கருத்துக்களை பகிரலாம் போன்ற பலவற்றிற்கு இந்த Blog பயன்படுகிறது

பிளாக் எப்படி உருவாக்க வேண்டும் 

முதலில் Google-ஐ Open செய்யவும் பிறகு Search-ல் blogger.com என்று டைப் செய்து முதலில் வரும் blogger-ஐ Click செய்யவும்
கீழே குறிப்பிட்டுள்ளவாறு blogger இருக்கும் இதில் create your blog என்ற பட்டனை Click செய்யவும்.
 

பிறகு உங்களுடைய Email address மற்றும் Password கொடுத்து உள்ளே செல்லவும்

கீழே குறிப்பிட்டுள்ளவாறு ஒரு page Open ஆகும் அதில் Display your name என்ற இடத்தில் நீங்கள் Public-க்கு என்ன பெயர் சொல்ல விரும்புகிறீர்களோ அந்தப் பெயரை குறிப்பிடவும் அதாவது உங்கள் கம்பெனி பெயர் அல்லது உங்கள் பெயரை குறிப்பிடவும் இது அனைவராலும் பார்க்கக்கூடிய பெயராகும்.

 

Continue to Blog என்று கிளிக் செய்யவும்

இப்போது create new blog என்ற பட்டனை அழுத்தவும் கீழே குறிப்பிட்டுள்ளவாறு இருக்கும்.

Title என்ற இடத்தில் உங்கள் blog-க்கு நீங்கள் வைக்க விரும்பும் தலைப்பை(Title) கொடுக்கவும் அதாவது நீங்கள் என்ன தலைப்பில் Blog எழுத விரும்புகிறீர்களோ அது சம்பந்தப்பட்ட தலைப்பை வைப்பது சிறந்தது.
Address என்ற இடத்தில் உங்கள் தலைப்பு சம்பந்தப்பட்ட அட்ரஸை கொடுப்பது சிறந்தது உதாரணமாக www.google.com இதை டொமைன் என்கிறோம்
இதுபோல உங்கள் தலைப்பிற்கு ஏற்ற டொமைனை கொடுக்கவும்
டொமைன் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் Seo-க்கு இது மிகவும் பயன்படுகிறது நீங்கள் தமிழில் Technology பற்றி எழுதுகிறீர்கள் என்றால் தமிழ் டெக்னாலஜி, தமிழ் இன்ஃபர்மேஷன் இதுபோல உங்கள் தலைப்பிற்கு ஏற்றவாறு அட்ரஸை கொடுக்கவும்.

 
 

Theme என்பது மிகவும் முக்கியமானது ஏனெனில் நம் வெப்சைட் அழகாக தோற்றமளிக்க இது மிகவும் பயன்படுகிறது.  நாம் போடும் போஸ்டர்கள் அழகாகவும் விரைவில் பார்க்கவும் இது உதவுகிறது. கீழே உள்ள தீமில் ஏதேனும் ஒன்றை select செய்யவும் இதனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். பிறகு create blog என்ற பட்டனை click செய்யவும்
இப்போது நீங்கள் கொடுத்த தலைப்பிலேயே உங்களுக்கு டொமைன் வேண்டுமா என்று கேட்கிறது வேண்டுமானால் Ok கொடுத்து வாங்கலாம் அல்லது skip செய்து விடலாம்.
no thanks என்ற பட்டனை click செய்யவும்

இப்போது நம்முடைய பிளாக் ready ஆகிவிட்டது

View blog என்ற பட்டனை கிளிக் செய்து நம்முடைய வெப்சைட்டை பார்க்கலாம். இதன் பிறகு நீங்க Post எழுதி Publish செய்யலாம்.

 

Conclusion:

 இந்த போஸ்டில் இதுவரை நாம் ஒரு புதிய பிளாகர் அக்கவுண்ட்டை எப்படி உருவாக்குவது அதில் புதிய ப்ளாகை எப்படி உருவாக்குவது மற்றும் அதை எப்படி வியூ செய்வது என்பதை பார்த்தோம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் 

Leave a Reply