Share Market Basics: Beginner Ultimate Guide in Tamil

ஷேர் மார்க்கெட் என்பது மிகப்பெரிய ஏல சந்தை, விற்பவர்களும் வாங்குபவர்களும் கூடும் இடம். இங்கு பல நிறுவனங்களின் பங்குகள் விற்கவும் வாங்கவும் ஏலம் நடைபெறும்.

ஒரு கம்பெனியின்  வளர்ச்சிக்கு அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு அதிக பணம்  தேவைப்படும் பொழுது அவர்கள் மக்களின் உதவியை நாடுவர்.  அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதற்கேற்றவாறு நிறுவனத்தின் பங்குகளை பிரித்து அவற்றை விற்பர். 

What is share:

நிறுவனங்கள் அவரவர் பணத் தேவைக்கு ஏற்றவாறு பங்குகளை விற்று பணம் பெறுவர். அதேபோல நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான அளவு ஷேர்களை விற்பனை செய்வது இல்லை.

 

ஒரு சிலர் அதிகமான Share தங்கள் வசம் வைத்துக் கொண்டு குறைவான பங்குகளை விற்பார்கள். ஒரு சில நிறுவனங்கள் பாதிக்கு பாதி அளவிற்கு பங்குகளை விற்பனை செய்வார்கள்.

 

அவரவர் தேவைக்கு ஏற்ப பங்குகளை விற்பனை செய்வார்கள். ஒரு பங்கினை வாங்கி விட்டால் மட்டும் நிறுவனத்திற்கு உரிமை கோர முடியாது ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருந்தால் மட்டுமே உரிமை கோரமுடியும்.

 

பங்கின் விலை உயர்ந்தால் பங்குதாரர்களுக்கு லாபம் கிடைக்கும், பங்கின் விலை குறைந்தால் நஷ்டம் ஏற்படும். ஒரு நிறுவனத்தின் ஒரு சிறிய பகுதியை பெறுவதே பங்காகும்.

 

உதாரணமாக இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பித்தார்கள் அதில் வரும் லாபம் இருவருக்கும் வழங்கப்படும் அதேபோல நஷ்டம் வந்தாலும் பிரித்துக் கொள்வர்.

 

இதில் நாம் எப்படி பணம் சம்பாதிப்பது என்றால் ஒரு நிறுவனத்தின் ஒரு சில பங்குகளை வாங்கி வைத்திருந்தால் அது உயரும் போது நமக்கு லாபம் கிடைக்கும் மேலும் சில நிறுவனங்கள் அதிக லாபம் கிடைத்தால் டிவிடெண்ட், போனஸ் என்ற பெயரில் பணம், ஒரு பங்கிற்கு ஒரு பங்கு இலவசமாகவே வழங்குவர் நாம் அப்படிப்பட்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.

Primary and Secondary Market Difference:


Primary Market என்பது ஒரு நிறுவனம் அதன் பங்குகளை விற்பது or சந்தைப்படுத்துவது, அதனை பிரைமரி மார்க்கெட் என்கிறோம். இங்கு வாங்க மட்டுமே அனுமதி உண்டு.

Secondary Market என்பது பங்குகளை வாங்கி விற்கும் இடம், இங்கு பிரைமரி மார்க்கெட்டில் வாங்கப்படும் பங்குகளை விற்கலாம் மேலும் புதிதாக பங்குகளை வாங்க வேண்டும் என்றாலும் செகண்டரி மார்க்கெட்டில் தான் வாங்க முடியும்.

Share Market Basics:

ஷேர் மார்க்கெட் முரண்பாடுகளை கண்காணிக்க இந்திய  அரசின் Securities and Exchange Board of India (SEBI) என்ற அமைப்பு ஒன்று உள்ளது.

 

இந்தியாவில் இந்த பங்கு சந்தையை நடத்துவதற்கு என்று மும்பை பங்குச்சந்தை(BSE -Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE- National Stock Exchange) உள்ளது.

NSE ல் 1700-க்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.BSE-ல் 5400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு கம்பெனி NSE அல்லது BSE-ல் LISTஆக வேண்டுமெனில் SEBI-ன் Approval  வாங்கினால்  தான் இணைக்க முடியும். BSE மற்றும் NSE அதற்கான தகுதியை வைத்துள்ளது. அதில் முழுமை பெற்றால் மட்டுமே IPO- க்கு போக முடியும். 

Sensex  என்பது BSE-ல்  சிறந்த 30 நிறுவனங்களின் குறியீடு ஆகும். Nifty என்பது சிறந்த NSE-ல் 50 நிறுவனங்களின் குறியீடு ஆகும்.

Leave a Reply