கத்தரிக்காய் HEALTH Benefits and BUYING Guide in Tamil

இந்த தொகுப்பில் நாம் சிறந்த கத்திரிக்காய் எவ்வாறு வாங்குவது என்பது பற்றியும், கத்திரிக்காவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்க்கப் போகிறோம்.

கத்தரிக்காயின் நன்மைகள்

1. கொலஸ்ட்ராலை குறைக்கும் அதாவது கெட்ட கொழுப்பை குறைக்கும்.
 
2. உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
 
3. மூட்டு வலி தோல் நோய் வராமல் தடுக்கும்.
 
4. கத்தரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகும், மழைக்காலங்களில் அதிகம் பயன்படுத்தலாம்.
 
5. மலச்சிக்கல் நீங்கும்.
 
6. பிளட் கேன்சர் வராமல் தடுக்கும்.
 
7. அடிபட்டவர்கள் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் கத்தரிக்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். ஏனெனில் அரிப்பு அதிகமாகும் புண் ஆற நாட்கள் அதிகமாகும்.
 

சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ்

சிறந்த கத்தரிக்காய் வாங்குவதற்கான சில டிப்ஸ்

Tip 1: கத்தரிக்காயின் தண்டு பச்சை நிறமாக இருக்கும் பழைய கத்திரிக்காய் என்றால் நிறம் மாற்றம் அடைந்து சாம்பல் நிறமாக இருக்கும்

 

Tip 2: அதன் தோல் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும்

Tip 3: கத்தரிக்காய் அதன் அளவுக்கு ஏற்ற அளவு பருமன் இருக்க வேண்டும் பருமன் குறைவாக இருந்தால் அது பழைய கத்திரிக்காய் அல்லது உள்ளே பூச்சி இருக்கும்

Tip 4: கத்தரிக்காய் பிஞ்சு அல்லது நடுத்தர அளவாக இருக்க வேண்டும் முற்றிய கத்தரிக்காய் கசப்பாக இருக்கும் அதில் விதைகள் முற்றி இருக்கும்

Tip 5: கத்தரிக்காய் அழுத்தினால் உடனடியாக சமநிலைக்கு வரும்

Tip 6: கருப்பு நிறப் புள்ளிகள் மற்றும் துளை இருந்தால் அதில் பூச்சி இருக்கும் அதனை தவிர்ப்பது சிறந்தது

Tip 7: தட்டினால் டொக் என்ற சத்தம் வரும்

 
 
Nutrients: Calories, Protein, Fat, Carbohydrates, Fiber
 
Vitamins: Vitamin A, Vitamin C, Vitamin K
 
Minerals: Calcium, Iron, Magnesium, Phosphorus, Potassium
 

Leave a Reply