Notepad Page Setup and Print in Tamil

 Notepad Page Setup and Print

Page setup:

 நாம் எழுதிய file-ஐ எவ்வாறு வெளியே output- ஆக எப்படி எடுப்பது என்பதை setup செய்வதே page setup ஆகும்.

File >>>page setup-ஐ open செய்தவுடன் கீழே படத்தில் உள்ளவாறு ஒரு box open ஆகும்.

Paper

முதலில் நமது பேப்பர் அளவு (paper size) setup செய்து கொள்ள வேண்டும், அதில் paper என்ற இடத்தில் paper size select செய்யவும்

Example: A4, A3, Letter, B4, …

Notepad Page Setup and Print

Orientation:

Orientation என்பது paper நீளமாக வேண்டுமா? அல்லது அகலமாக வேண்டுமா? என்பதை தேர்வு செய்வது.

Portrait என்பது நீளமாகவும், landscape என்பது அகலமாகவும் print எடுக்க உதவும்.

Header & footer:

Header என்பது paper-ன் கீழே margin பகுதியில் காண்பிக்கும். இந்த பகுதியில் தலைப்பு, தேதி ,மாதம், வருடம் ,நேரம், எழுத்துக்கள் மற்றும் எண்கள் என அனைத்தையும் நம்மால் கொடுக்க முடியும்.
Footer என்பது paper-ன் கீழே margin பகுதியில் காண்பிக்கும். இதில் தேவையானதை நாம் பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணமாக தலைப்பு என்பது header பகுதியிலும் page number என்பது footer பகுதியிலும் பயன்படுத்துவர்.

இவற்றை align செய்ய Left, Right, Center போன்ற alignment பயன்படுகிறது

 

            &l                     —-       Lift Alignment

            &c                    —-       Center Alignment

            &r                    —-       Right Alignment

 

இந்த alignment-ஐ பயன்படுத்தி எந்த பக்கம் வேண்டுமா அந்த பக்கம் header, footer-ல் பயன்படுத்தலாம்.

 

&d                    —-       Date

&t                     —-       Time

&f                    —-       Document Name

&p                    —-       Page Number

 

இதனை பயன்படுத்தி header மற்றும் footer-ல் எது தேவையோ அதனை பயன்படுத்தலாம்.

 

 

Margin:


 Margin என்பது paper-ன் நான்கு மூலைகளிலும் எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதாகும். உதாரணமாக left -1 என்றால் paper-ன் left side-ல் 1 inch இடைவெளிவிட்டு நாம் எழுதும் text ஆரம்பிக்கும் இதனை preview – ல் காணலாம் .

                        Left: 1                          right: 1

                        Top: 1                          Bottom: 1


Print:

File >>> print

Print என்பது நான் எய்திய file (அல்லது) document – ஐ வெளியே எடுப்பது அதற்கு நாம் print-ஜ பயன்படுத்தலாம். தேவை எனில் இதனை PDF-file ஆகவும் Save செய்யலாம். .

 

 

Select printer: 

இதில் நமது file -லை எவ்வாறு எடுக்க போகிறோம் என்பதை select செய்யவும் , printer ,pdf ,word அல்லது OneNote-ல் save செய்யலாம்.

Page Range:

இதில் நாம் எதை Print எடுக்க போகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும். அனைத்து பக்கங்களும் அல்லது குறிப்பிட்டவை மட்டுமா என்பதே என்பதை Page Range-ல் குறிப்பிடவும்

All என்றால் அனைத்தும் Print ஆகும், Selection என்றால் நாம் Select செய்தவை மட்டுமே Print ஆகும். Pages என்றால் எந்த Page வேண்டுமா அவற்றை மட்டும் Print எடுக்கலாம். 

 

Number of Copies:

இதில் நீங்கள் எடுக்கும் Print எத்தனை Copy வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும் . 1 என்றால் 1 முறை Print ஆகும் 2 என்றால் 2 முறை Print ஆகும்.

Leave a Reply