how to create a gmail account (புதிதாய் ஜிமெயில் அக்கவுண்ட்) in Tamil

How to create a Gmail account

புதிதாய் ஜிமெயில் அக்கவுண்ட் ஓபன் செய்வது எவ்வாறு என்பதை இந்த போஸ்டரில் நாம் பார்க்கப் போகிறோம்.

Step 1: முதலில் ஜிமெயில் (gmail.com) என்ற இணையதளத்திற்கு செல்லவும். பிறகு அங்கேயுள்ள Create an account என்ற பட்டனை அழுத்தவும்.

இப்போது புதிதாய் ஒரு Page ஓபன் ஆகும், படத்தில் உள்ளவாறு இருக்கும்

Step 2: உங்களின் பெயர், துணை பெயர் குறிப்பிடவும், பிறகு user name என்ற இடத்தில் உங்களின் ஜிமெயில் அக்கவுண்டிற்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பெயரை குறிப்பிடவும்.

Tips: இப்போது வைப்பது உங்களின் ஜிமெயில் ஆக்கவுண்ட்-இன் பெயராகும், எனவே உங்கள் யூட்யூப் சேனல் வேறு ஏதேனும் ஆன்லைன் தேவைகளுக்காக கிரியேட் செய்கிறீர்கள் என்றால் அதன் பெயரிலே உருவாக்கலாம்.

உங்களின் பாஸ்வேர்டை இங்கே குறிப்பிடவும் குறைந்தது 8 லட்டர் ஆவது இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் இதில் லெட்டர்ஸ் நம்பர்ஸ் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர் அனைத்தையும் குறிப்பிடலாம்

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் முடித்துவிட்டு நெக்ஸ்ட் என்ற பட்டனை அழுத்தவும்

Tips: உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் இன் பெயர் ஏற்கனவே இருந்தால் ரெட் கலரில் அந்த பாக்ஸ் தோன்றும் எனவே மீண்டும் உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டில் பெயரை மாற்றி பதிவிடவும்

Step 3: உங்களின் மொபைல் எண் மற்றும் ஏற்கனவே ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதன் பெயர் இரண்டையும் கீழே படத்தில் காண்பித்துள்ள இடத்தில் குறிப்பிடவும், இவை இரண்டும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை தேவை என்றால் குறிப்பிடவும்.

Tips: இவை ஏன் குறிப்பிட வேண்டுமெனில் இதனால் உங்கள் பாஸ்வேர்ட் அல்லது இமெயில் ஐடி ஏதேனும் ஒன்றை மறந்து விட்டால் மீண்டும் உங்களின் அக்கவுண்ட்டை ரெக்கவர்(Recover) செய்ய இது உதவும்.

மேலும் வேறு எவரேனும் உங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டை ஓபன் செய்தால் உங்களுக்கு அலர்ட் மெசேஜ் வரும்

நீங்கள் பிறந்த தேதியை குறிப்பிடவும் எந்த நாள் எந்த மாதம் எந்த வருடம் என்பதை குறிப்பிடவும்

நீங்கள் ஆணா பெண்ணா என்பதை குறிப்பிடவும்

இவற்றை முடித்துவிட்டு நெக்ஸ்ட் என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4: இப்போது புதிதாக ஒரு பேச்சு ஓபன் ஆகும், Privacy and terms என்று கண்டிஷனை படிக்கவும் கீழே நகர்த்திக் கொண்டு வரும்போது I agree என்ற பட்டன் தோன்றும் அந்த பட்டனை அழுத்தவும்.

Step 5: இப்போது உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் உருவாகிவிட்டது கீழே படத்தில் காண்பித்து உள்ளவாறு உங்களின் அக்கௌன்ட் ஓபன் ஆகும்

Conclusion:

இந்த போஸ்டரில் நாம் புதிதாய் ஒரு ஜிமெயில் அக்கௌன்ட் எப்படி உருவாக்குவது என்பதை பார்த்தோம் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்டில் தெரிவிக்கவும்.

Leave a Reply