Free Blogger Template SEO in Tamil

Blogger Template SEO in Tamil

இந்த post-ல் முக்கியமான Blog-ற்கு ஏற்ற Error இல்லாத அட்சென்ஸ் அப்ரூவல் தரக்கூடிய சிறந்த SEO-க்கு ஏற்ற ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை எப்படி தேர்வு செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். ஒரு Template(theme) செலக்ட் செய்வதற்கு முன்பு அதில் கவனிக்கப்பட வேண்டியது நிறைய உள்ளது.
  1. Responsive
  2. Google Testing Tool Validator
  3. Mobile Friendly
  4. Custom 404 Page
  5. Fast Loading

1. Responsive Web Design Testing Tool

இந்த Tool-லின் மூலம் உங்களது வெப்சைட் மொபைல் பிரெண்ட்லி ரெஸ்பான்ஸ் வெப்சைட் என்பதை கண்டறியலாம். மேலும் இதன்மூலம் ஐபோன் ஆண்ட்ராய்ட் போன்றவற்றில் நமது Website எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

உங்களின் வெப்சைட் அட்ரஸ் அல்லது Domain அட்ரஸ்- இதில் டைப் செய்து என்டர் கொடுத்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.

Responsive Web Design Testing Tool
Responsive Web Design Testing Tool

2. Structure Testing Tool

இந்த Tool-லின் மூலம் உங்கள் டெம்ப்ளேட்டில் Structure எப்படி உள்ளது. ஏதேனும் Error உள்ளதா என்பதை கண்டறியலாம். Structure Data என்பது Search-ல் நம்முடைய வெப்சைட் அல்லது போஸ்ட் எப்படி தெரிய வேண்டும் என்பதை குறிப்பிடுவது இதனை SERP என்று கூறுவார்கள்.

உதாரணமாக கீழே சில SERP-களின் படங்கள் உள்ளது

SERP Sample1
SERP Sample2

SERP Sample3

3. Your Webpage is mobile friendly

உங்களுடைய வெப்சைட் Mobile-லில் சரியாக உள்ளதா என்பதை கண்டறிவதற்காக இந்த Tool உபயோகப்படுகிறது. இதன் மூலம் நமது வெப்சைட் மொபைல் Friendly-யாக இருந்தால் அதிக viewers கிடைக்கும், மொபைலில் உபயோகிப்பவர்களுக்கு உபயோகமாகவும் இருக்கும்.

Tips: மொபைல் பிரெண்ட்லியாக இல்லாதவர்களின் வெப்சைட்டை Search ரெகமெண்ட் செய்யாது எனவே உங்களின் விசிட்டர்ஸ் குறைய வாய்ப்பு உள்ளது.

Mobile-friendly testing tool

4. Custom 404 Page

404 என்பது நமது வெப்சைட்டில் ஏதேனும் லிங்க் வொர்க் ஆகவில்லை என்றால் நம்முடைய Home Page-க்கு செல்லுமாறு கூறுவதாகும் இதனையே 404 என்பர்.
இந்த 404 எனும் Page இல்லை என்றால் நம் லிங்கை கிளிக் செய்யும்போது இந்த  லிங்கே இல்லை என காண்பிக்கும்

Tips: இவ்வாறு காண்பிப்பதால் நம்முடைய வெப்சைட்டை சர்ச்சில் முன்னே கொண்டு செல்லாது

 404 page உள்ளதா என்பதை எப்படி  செக் செய்வது என்பதை பார்க்கலாம்,

 நம்முடைய டொமைன் அட்ரஸ் கொடுத்து /  போட்டு ஏதேனும் ஒரு வாக்கியம் அல்லது 404  என டைப் செய்தால் Home page-க்கு செல்லவும் என கூறும் அவ்வாறு கூறவில்லை என்றால் அந்த டெம்ப்ளேட்டில் 404 இல்லை என அர்த்தம்.



Example:

htts://www.google.com/404


இது முக்கியமானதாகும் ஏனெனில் இதனால் தான் நம்முடைய வெப்சைட் முதல் பக்கங்களில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஏனெனில் நம்முடைய வெப்சைட் வேகமாக Load-ஆகினால் தான் Search-யில் முதலில் வரும்.

எனவே Fast Loading மிகவும் முக்கியத்துவமானது. இதனை கீழே படத்தில் காண்பித்துள்ள வாரு வெப்சைட்டின் அட்ரஸை செலுத்தி Start test என்று கொடுத்தால் உங்களுடைய Website ஸ்பீடை காண்பிக்கும்.

Tips: Fast Loading டெம்ப்ளேட்டை தேர்வு செய்வது மிகவும் அவசியம்

Fast Loading Test

Best SEO blogger templates free download providers

இப்போது பிளாக்கர் டெம்ப்ளேட் எங்கே இலவசமாக கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கீழே சில Blogger டெம்ப்ளேட்டை இலவசமாகத் தரும் வெப்சைட்டுகளில் அட்ரஸ் உள்ளது. 

இதுபோல நிறைய வெப்சைட்கள் உள்ளன அதில் சிறந்த வெப்சைட்டுகளில் அட்ரஸ் மட்டும் கொடுத்துள்ளேன்.

Gooyaabitemplates

இந்த வெப்சைட்டில் பலவகையான டெம்ப்ளேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

free blogger templates
அதில் எந்த வெப்சைட் வேண்டுமோ அதனை கிளிக் செய்தால் கீழே உள்ளவாறு அந்த பேஜ் ஓபன் ஆகும்
Free blogger templates
பிறகு அதன் Live Preview-வினை பார்க்க வேண்டுமென்றால் Live Preview என்ற பட்டனை கிளிக் செய்து பார்க்கலாம். உங்கள் வெப்சைட் எவ்வாறு இருக்கும் என்பதை காண்பிக்கும்
Download பட்டன் மூலம் அந்த டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்யலாம், வேண்டுமானால் பணம் கொடுத்தும்(Buy) வாங்கலாம்.

ஏன் பணம் கொடுத்து வாங்குகிறோம் என்றால் இன்னும் அதிக Freatures அதில் இருக்கும் மேலும் Script coding இல்லாத டெம்ப்ளேட் கிடைக்கும். Footer-யில் உங்கள் பிளாக்கர் பெயரை காப்பிரைட்(copyright) செய்து கொள்ளலாம்.

BTemplates

இந்த வெப்சைட்டில் பலவகையான டெம்ப்ளேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன கீழே படத்தில் உள்ளவாறு இருக்கும் இதில் ஒவ்வொரு Template-லும் டெமோ டவுன்லோட் என்று இருக்கும். இந்த டெம்ப்ளேட் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க டெமோ என்ற பட்டனை கிளிக் செய்து பார்க்கலாம்

DEMO கீழே காண்பித்து உள்ளவாறு இருக்கும் இதில் மொபைல் டேப்லெட் கம்ப்யூட்டர் போன்றவற்றில் எவ்வாறு தெரியும் என்பதனை ஜெமோவின் மேலே உள்ள மெனு பாரில் பார்க்கலாம்.

Template demo
டவுன்லோட் செய்ய டவுன்லோட் என்ற பட்டனை கிளிக் செய்து அடுத்து வரும் பக்கத்தில் Free Download என்ற பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இது போலவே Oddthemes Soratemplates, weblyb போன்றவற்றிலும் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்தபின் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் Check செய்யவும். Error இல்லாத ரெஸ்பான்ஸ் வான SEO friendly டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும்.

Conclusion:

மேலே ஒரு டெம்ப்ளேட்டை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், தேர்வு செய்தால் அதில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது அனைத்தையும் பார்த்தோம்.இந்த போஸ்ட் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

Leave a Reply