CSS Colors in Tamil | Color format and apply (Text, Background, Border)

CSS Colors in Tamil

Color இருந்தால் நாம் செய்யும் webpage மிகவும் அழகாகவும் தேவையானவற்றை சரியாக குறிப்பிட்டும்(highlight) காண்பிக்க முடியும்.
Color: webpage design செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நமக்கு தேவையான color- ஐ css-ல் 6 விதமான முறைகளில்(Format-ல்) குறிப்பிடலாம்

1.RGB

2.RGBA

3.HSL

4.HSLA


5.Hexadecimal value

6.Color name

1. RGB

Rgb (red ,green ,blue)

இது 0 – விலிருந்து 255 – வரை காண்பிக்கும் . இதில் Rgb (0,0,0)என்பது கருப்பு நிறம் , 0 – ன் அளவு அதிகரிக்க அதிகரிக்க நிறமாற்றம் அடையும் rgb (255 ,255 ,255)என்பது வெள்ளை நிறம் , Red , Green , Blue இந்த மூன்று நிறங்களும் இணைந்து நமக்கு தேவையான நிறத்தை அளிக்கிறது .

இதன் மூலம் நிறம் குறைந்த அல்லது நிறம் அதிகமான color – ஐ நாம் பயன்படுத்தலாம்.
Eg:
rgb(255,255,255)
css colors

Result:

2.RGBA

Rgba(red,green,blue,alpha)

இது rgb -ஐ போன்றே கணக்கிடப்படுகிறது . இதில் மேலும் alpha என்ற opacity இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பின்புறம் இருக்கும் பேக்ரவுண்டு காண்பிக்கும் படி நம்மால் நிறத்தை apply செய்ய முடியும்.

Opacity 0 விலிருந்து 1 வரை உள்ளது 1 என்பது முழு நிறத்தையும் 0 என்பது நிறமற்றதாகவும் கணக்கிடப்படுகிறது .

Eg :

rgba(255 ,90 ,5 ,0.5)

3.HSL

Hsl (hue ,saturation ,lightness)

HSL மூலம் நாம் COLOR-ஐ குறிப்பிடலாம் . இதில் h என்பது hue . இது 0 முதல் 360 degree வரை உள்ளது .

உதாரணமாக:

240 என்பது blue color 0 என்பது red color இதில் நமக்கு தேவையான degree – ஐ தேர்வு செய்து உபயோகிக்கலாம் .

Saturation:

ஒரு நிறத்தின் அடர்த்தியை குறிப்பிடுவது இதில் 0% முதல் 100% வரை பயன்படுத்தலாம் . 50 % என்பது நாம் தேர்ந்தெடுக்கும் நிறத்தின் பாதி color 100% முழு நிறம்

Lingtnoss :

நாம் தேர்வு செய்யும் நிறத்தை மங்கலான நிறமாக  மாற்றுவது .

இதனை 0% முதல்100% வரை பயன்படுத்தலாம்

இதன் மூலம் அதிக பிரகாசமான அல்லது மங்கலான நிறத்தை நாம் பயன்படுத்தலாம்.

Eg:

hsl (240, 50%, 50%)

4.Hsla

hsla(hue,saturation,lightness,alpha)

Hsla என்பது hsl – உடன் opacity இணைந்து வரும் color அதாவது transparent எந்த அளவு வேண்டும் என்பதை சேர்த்து கிடைக்கும் color. 

Eg:

hsla (240,50%,50%,0.3)

5.Hex:(hexadecimal) value

#RRGGBB
Hex code 6 digit -இல் இருக்கும், இது #(hash) tag உடன் ஆரம்பிக்கப்படும். இது இரண்டு இரண்டு digit -ஆக கணக்கிடப்படுகிறது 0 முதல் 9 வரை உள்ள எண்களாக உபயோகிக்கப்படுகிறது. மேலும் A முதல் F வரை உள்ள Lettrs உபயோகிக்கப்படுகிறது.

இதன் மூலம் நமக்கு விருப்பமான color -ஐ தேர்வு செய்யலாம். இதனால் exact color -ஐ நாம் தேர்வு செய்ய முடியும். 

Eg:

#48d2a7



6.Color name

நேரடியாக நமக்கு தேவையான color-ன் பெயரை குறிப்பிட்டு பயன்படுத்தலாம். 

Eg:

color: red;

How To Apply CSS Colors on HTML (இதனை பின்வருவனவற்றில் பயன்படுத்தலாம்).


1.Text color

2.Background color

3.Border color

மூன்று முறைகளுக்கு அழகு படுத்த பயன்படுகிறது

1.Text color

Text-ன் color-ஐ மாற்றலாம். நமக்கு தேவையான color-ல் text -ன் நிறத்தை மாற்றலாம். அனைத்து text-ன் நிறம் அல்லது குறிப்பிட்ட text-ன் நிறத்தை மாற்றலாம். 

உதாரணமாக
color: brown

2.Background color

HTML element-ன் பின்புற நிறத்தை மாற்றலாம்.

உதாரணமாக

Table ,paragraph ,text box ,heading …

3.Border color

HTML element அனைத்திற்கும் border-color apply செய்யலாம்

உதாரணமாக:

Paragraph, heading, …

CSS comments

Css-coding எழுதும்போது ஏதேனும் பகுதி தற்சமயம் தேவையில்லை ஆனால் பிறகு தேவை எனில் அதனை comment tag பயன்படுத்தி அந்தப் பகுதி மட்டும் செயல்படுத்துவதை தடுக்கலாம்.

மேலும் நாம் coding-ல்ஏதேனும் Notes குறிப்பிட்டு பகுதியாக புரியும்படி எழுதுவதற்கு பயன்படுத்தலாம்.

eg:/*header பகுதி*/

body பகுதி , footer பகுதி

இதற்கு /*text */ என குறிப்பிடலாம். இவ்வாறு குறிப்பிடுவதால் மீண்டும் coding-ஐ எழுத அல்லது பயன்படுத்த எளிமையாக இருக்கும் comment webpage-ல் display ஆகாது.

/*your

text*/

Leave a Reply